/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநியில் பாதாள சாக்கடை திட்டம் : ரூ. 44 கோடி மதிப்பீடுபழநியில் பாதாள சாக்கடை திட்டம் : ரூ. 44 கோடி மதிப்பீடு
பழநியில் பாதாள சாக்கடை திட்டம் : ரூ. 44 கோடி மதிப்பீடு
பழநியில் பாதாள சாக்கடை திட்டம் : ரூ. 44 கோடி மதிப்பீடு
பழநியில் பாதாள சாக்கடை திட்டம் : ரூ. 44 கோடி மதிப்பீடு
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
பழநி : பழநியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 44 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என, நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கூட்டம் நடந்தது. கமிஷனர் முத்து, நகரமைப்பு அலுவலர் ருத்ராபதி, துணை தலைவர் ஹக்கீம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
விவாதங்கள்:
சுரேஷ்:வடக்கு, கிழ க்கு ரத வீதிகளில் சிமெ ன்ட் தளம் அமைக்கவில் லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாது ஏன்?
கமிஷனர்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 44 கோடி ரூபாயில் மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
தண்டபாணி: பணி உத்தரவு கொடுத்தும், இரண்டு ஆண்டுகளாக, எனது வார்டில் சிமென்ட தளம் அமைக்கவில்லை.
தலைவர்: மணல் தட்டுப்பாட்டால் சிமென்ட் தளம் அமைக்கவில்லை.
பழனிச்சாமி: 8 வது வார்டில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பன்றித் தொல்லையும் அதிகம்.
சுந்தர்: பழநி நகரின் குடிநீர் ஆதாரமான நீர்த்தேக்கத்தின் கொள்ள ளவை அதிகமாக்க வேண்டியது அவசியம். இதை உடனடியாக தூர் வார வேண்டும்.
கஸ்தூரி: எனது வார்டில் சாக்கடை கால்வாய் எங்கு இருக்கிறது என, தெரியவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
சில பெண் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்து பேசினர். கவுன்சிலர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்) பேசக்கூடாது என, முஜிபுதீன் (தி.மு.க.,) கூறியதால், நீண்ட நேரம் காரசார விவாதம் நடந்தது. கூட்டம் துவங்கும் முன், தலைவர், கவுன்சிலர்கள் 'குரூப்' போட்டோ எடுத்துக்கொண்டனர்.