ADDED : செப் 14, 2011 08:55 AM

சென்னை: 50 ஆண்டுகளுக்கு மேல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி, சமாளித்து வாழ்ந்து வருவோருக்கு,சென்னை, மோகன் நீரிழிவு மையம் சார்பில், நீரிழிவு நோயை வென்றோருக்கான விருது மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
விருதினை ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி வழங்கினார். அருகில் இடமிருந்து டாக்டர்கள் சாந்தா, அஞ்சனா, ரஞ்சன் உன்னிகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மோகன் நீரிழிவு மையத்தின் நிறுவனர் டாக்டர் மோகன்.