/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.70 கோடி மோசடி வழக்கு மூவர் கைதுரூ.70 கோடி மோசடி வழக்கு மூவர் கைது
ரூ.70 கோடி மோசடி வழக்கு மூவர் கைது
ரூ.70 கோடி மோசடி வழக்கு மூவர் கைது
ரூ.70 கோடி மோசடி வழக்கு மூவர் கைது
ADDED : ஜூலை 27, 2011 02:37 AM
கோவை : தொழிலதிபருக்கு 70 கோடிரூபாய் கடன் வழங்கி, தனியார் நிதி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்திய, பிசினஸ் டெவலப்மென்ட் அதிகாரி உள்பட மூவரை பெங்களூரு சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவிநாசி ரோடு, தனியார் கட்டடத்தில் குளோபல் டிரேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2010, பிப்ரவரியில் எஸ்.பி.ஐ.,குளோபல் பேக்டர்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ., குளோபல் பேக்டர்ஸ் நிறுவன அதிகாரிகள் நிதி நிறுவன கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில்,70 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, எஸ்.பி.ஐ., குளோபல் பேக்டர்ஸ் நிறுவன உயரதிகாரிகள் பெங்களூரு சி.பி.ஐ.,யில் புகார் செய்தனர். 2010ல் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ.,விசாரணையை துவக்கியது. இதில், தொழிலதிபர் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இதன் பின் நடந்த விசாரணையில், மோசடிக்கு உடந்தையாக இருந்த குளோபல் டிரேட் பைனான்ஸ் நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மென்ட் அதிகாரியாக பணியாற்றிய அறிவரசன், மும்பையைச் சேர்ந்த அமரேஷ் அலுவாலியா, டிரைவர் செந்தில்குமார் ஆகியோரை சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்தனர். கோவை சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களிடம் கூடுதல் தகவல் பெற முடிவு செய்த அதிகாரிகள், கஸ்டடி கேட்டு மனுதாக்கல் செய்தனர். நீதிபதி ராமசாமி மனுவை விசாரித்து, ஒரு நாள் கஸ்டடிக்கு அனுமதி அளித்தார். விசாரணைக்குப் பின், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவினாசி ரோடு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி பொது மேலாளர் ஹரிதாஸ் கூறுகையில்,''அவினாசி ரோடு, யு.ஆர். ஹவுஸ் கிளையில் செயல்படும் எங்களது வங்கிக் கிளையில் இதுவரை எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. நியாயமாகவும், நேர்மையாகவும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்படுகின்றனர். எப்போதும் போல எங்களது சேவை மேன்மையாக இருக்கும்,' என்றார்.