தூத்துக்குடி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களை பாதுகாக்க மணிமுத்தாறு அø ணயில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும், தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும், ஊழல்முறையில் நடக்கும் 20 எம்.ஜி.டி., திட்டத்தை உட னே நிறுத்த வேண்டும், 20 எம்.ஜி.டி., திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணையை உடனே தூர் வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாமிரபரணி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் நயினார் குலசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா ஆகியோர் நேற்று தங்களது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தொ டங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, தாமிரபரணி நதி மட்டும் தான் தமிழகத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடையும் வற்றாத நதியாகும். தாமிரபரணி மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது. இதுதவிர லட்சகணக்கான மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். தற்போது தாமிரபரணி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தாமிரபரணி நதியில் இருந்து தண்ணீர் மற்றும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை. குடிநீர், உணவு, விவசாயம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டு விவசாயத்திற்கு பதில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுக்க யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விவசாயத்திற்கு போக மீதமுள்ள தண்ணீரை தான் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும். ஸ்ரீவை., அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நாள்தோறும் 20 மில்லியன் காலன் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடகால், தென்கால் பாசனப்பரப்பில் விவசாயம் பாதி க்கப்பட்டுள்ளது. இதேபோல் மருதூர் மேலக்கால் மற்றும் கிழக்கால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆ த்தூர், ஆறுமுகமங்கலம் குள ம் மூலம் பாசன பெறும் பகுதிகள் தமிழக அளவில் முதல்தரமான நஞ்சை நிலமாகும். தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த பகுதிகளில் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது.