உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டி
ADDED : செப் 09, 2011 08:41 PM

கும்பகோணம் : ''உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும்,'' என்று கும்பகோணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் ம.தி.மு.க., பிரமுகரின் புதுமனை புகுவிழாவிற்கு வந்த வைகோ, கும்பகோணத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ம.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது.
மக்கள் மன்றத்தில் தற்போது, ம.தி.மு.க.,வுக்கு நல்ல ஆதரவு பெருகி வருகிறது.முல்லைப்பெரியாறு அணை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் ம.தி.மு.க.,வின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரிகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆரம்பகாலத்திலிருந்து, ம.தி.மு.க., ஒரே நிலையில் இருந்து வருகிறது.இலங்கை தமிழர்கள் படுகொலை பிரச்னைகளை பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில், ஒரு லட்சம் சி.டி.,க்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடவில்லை.இவ்வாறு வைகோ தெரிவித்தார்.