/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் பிற்பட்டோர் விடுதி மாணவர்கள்விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் பிற்பட்டோர் விடுதி மாணவர்கள்
விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் பிற்பட்டோர் விடுதி மாணவர்கள்
விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் பிற்பட்டோர் விடுதி மாணவர்கள்
விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் பிற்பட்டோர் விடுதி மாணவர்கள்
ADDED : செப் 07, 2011 10:53 PM
கமுதி : அபிராமம் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி பராமரிக்கப்படாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
அபிராமம் அரசு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல மாணவர் விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.
விடுதியை சுற்றிலும் ஆளுயரத்திற்கு கருவேல செடிகள் முளைத்துள்ளன. மழைக்காலங்களில் பாம்புகள் உட்பட பல பூச்சிகள் விடுதிக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் இரவில் தூங்காததால் பள்ளியில் பாடங்களை கவனிக்க தவறுகின்றனர். எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.விடுதி சுற்றுச்சுவர் மற்றும் கேட் இடிந்துள்ளது. இவற்றை சீரமைக்க பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.