Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/கவிதை ஒப்புவித்தல் போட்டி தி.மு.க., இளைஞர் அணி ஏற்பாடு

கவிதை ஒப்புவித்தல் போட்டி தி.மு.க., இளைஞர் அணி ஏற்பாடு

கவிதை ஒப்புவித்தல் போட்டி தி.மு.க., இளைஞர் அணி ஏற்பாடு

கவிதை ஒப்புவித்தல் போட்டி தி.மு.க., இளைஞர் அணி ஏற்பாடு

ADDED : செப் 01, 2011 11:37 PM


Google News

அரியலூர்: அரியலூர் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், மாணவ, மாணவியருக்கு கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டி நடந்தது.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகள், வாலாஜாநகரகத்தில் உள்ள இந்திய மருத்துவ கழக கட்டிடத்தில் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தெய்வ இளையராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராஜராஜன், லூயி கதிரவன் வரவேற்றனர்.



உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கான, பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளை, தி.மு.க., அரியலூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர் துவக்கி வைத்தார். தலைமை நடுவராக தி.மு.க., தலைமை பேச்சாளர் குமரி மணிமாறன் செயல்பட்டு போட்டிகளை நடத்தினார். பேச்சு, கட்டுரை, கவிதை, உள்ளிட்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவியர் மற்றும் ஆறுதல் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர் உள்பட, 39 மாணவ, மாணவியருக்கான சான்று மற்றும் பரிசுகளை, தி.மு.க., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா சந்திரசேகரன் வழங்கினார். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் அறுமுகம், நகர செயலாளர் முருகேசன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சாந்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், கென்னடி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் பாண்டியன், மேகநாதன், அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us