Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வீட்டின் மீது கற்கள் வீசியஇரு வாலிபர்கள் கைது

வீட்டின் மீது கற்கள் வீசியஇரு வாலிபர்கள் கைது

வீட்டின் மீது கற்கள் வீசியஇரு வாலிபர்கள் கைது

வீட்டின் மீது கற்கள் வீசியஇரு வாலிபர்கள் கைது

ADDED : ஆக 13, 2011 01:00 AM


Google News
ப.வேலூர்: முன் விரோதம் காரணமாக, வீட்டின் மீது கற்களை வீசி சேதப்படுத்திய இரண்டு வாலிபர்களை, ப.வேலூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ப.வேலூர் அடுத்த கோப்பணம்பாளையத்தை சேர்ந்தவர் பாலு (32). அவரது மனைவி சுஜிதா (30). அவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (30), முருகேசன் (28) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

அதனால், இரவு நேரத்தில் பாலு வீட்டின் மீது கற்களை வீசி ஓடுகளை சேதப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இது குறித்து ப.வேலூர் போலீஸில் ஏற்கனவே புகார் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பாலு தனது மனைவி சுஜிதாவுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென வீட்டின் மீது சரமாரியாக கற்கள் விழுந்து ஓடுகள் உடைந்து சிதறியது.அதிர்ச்சியடைந்த பாலு, வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டுக்கு வெளியே வேலுசாமியும், முருகேசனும் நின்றிருந்தனர். பாலு வெளியே வந்ததை பார்த்ததும், இருவரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இது குறித்து பாலு, ப.வேலூர் போலீஸில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us