Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு மக்களிடையே மவுசு :மூன்று தலைமுறையாக 25 குடும்பம் பிழைப்பு

ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு மக்களிடையே மவுசு :மூன்று தலைமுறையாக 25 குடும்பம் பிழைப்பு

ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு மக்களிடையே மவுசு :மூன்று தலைமுறையாக 25 குடும்பம் பிழைப்பு

ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு மக்களிடையே மவுசு :மூன்று தலைமுறையாக 25 குடும்பம் பிழைப்பு

ADDED : ஆக 11, 2011 03:49 AM


Google News
நாமக்கல் : தலைமுறை தலைமுறையாக உற்பத்தி செய்து வரும் ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு, இன்றளவும் அதன் மவுசு, மக்களிடையே அதிகரித்து வருகிறது.நவீன உலகத்தில், ஒவ்வொரு வீட்டிலும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இத்தகைய பொருட்கள் விலை அதிகமாக இருப்பதால், அவை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துவதில்லை. மாறாக ஒருசில வீடுகளில் அவை இன்னும் அலங்கரிக்கவில்லை என்பது உண்மை.ஆனால், ஆட்டுக்கல், அம்மிக்கல் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அது பயன்படுத்துப்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் குடிசை வீடு முதல், மாளிகை வீடு வரை அனைத்திலும் இந்த ஆட்டுக்கல், அம்மிக்கல் ஒரு மூலையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.அதை ஆண்டாண்டு காலமாக சம்பிரதாயமாகவே நம் மக்கள் கடைபிடித்து வருகின்றனர். நமது முன்னோர்கள் சமையல் செய்யும்போது, மிளகு சாமான்களை அம்மியில் அரைத்து வைத்து மணமணக்கும் சாம்பாரை தயார் செய்து பயன்படுத்தி வந்தனர். அந்த அம்மிக்கல்லில் அரைத்து வைத்த குழம்பு மற்றும் சாம்பாரின் ருசியே தனி.அதேபோல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து, இட்லி, தோசை சுட்டு சாப்பிட்டு வந்தனர். அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை ஆட்டுக்கல்லில் இடித்து பின் உணவுக்கு பயன்படுத்தி வந்தனர். அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, நவீன எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான கிரைண்டர், மிக்ஸி வந்ததை தொடர்ந்து, ஆட்டுக்கல், அம்மிக்கல்லின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.இருந்தும், அவற்றின் மதிப்பு இன்னும் குறையவில்லை. அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் உற்பத்தியை இன்றளவும் பல்வேறு பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கூலிப்பட்டி, பொட்டணம் அடுத்த சாலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மாரியப்பன் கூறியதாவது:கடந்த மூன்று தலைமுறையாக, 25 குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எலட்க்ரானிக்ஸ் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு மவுசு இன்னும் குறையவில்லை.ஒவ்வொரு வீட்டிலும் மிக்ஸி, கிரைண்டர் இருந்தாலும் இந்த இரண்டும் அவசியம் இருக்க வேண்டும். காரணம், திருமணத்தில் மணமகளுக்கு மெட்டி போடும்போது அம்மியில் வைத்துதான் மெட்டி அணிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு அம்மிக்கல், குளவிக்கல் தயார் செய்ய முடியும்.வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு கமிஷன் அடிப்படையில் ஆட்டுக்கல், அம்மிக்கல்லை விற்பனை செய்து வருகின்றனர். அம்மிக்கல், 19 இன்ச், 16 இன்ச், சிறிய வகை என மூன்று ரகத்தில் தயார் செய்யப்படுகிறது. அதில், 19 இஞ்ச், 325 ரூபாய், 16 இன்ச், 275 ரூபாய், சிறியது, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், ஆட்டுக்கல், 18 இன்ச், 15 இன்ச் என இரண்டு ரகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 18 இன்ச், 550 ரூபாய், 15 இன்ச், 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எத்தகைய அதிநவீன தொழில் நுட்பத்தில் பொருட்கள் வந்தாலும், அம்மிக்கல், ஆட்டுக்கல்லின் மவுசு குறையாது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us