ADDED : ஜூலை 27, 2011 02:37 AM
கோவை : கோவை ரயில்வே ஸ்ஷேன் முதலாவது பிளாட்பாரத்துக்கு நேற்று காலை 8.45 மணிக்கு சபரி எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.
அப்போது, சாதாரண உடையில் இருந்த நபர் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்; ரயில்வே அதிகாரிகளிடமும் கூறினர். அதிகாரிகள் வந்து பார்த்தபோது பரிசோத கர் 'போலி' என தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி(28) என்றும், சித்தப்பாவை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் தேடப்படும் நபர் என்றும் தெரிந்தது. கைது செய்யப்பட்ட திருப்பதி, சிறையில் அடைக்கப்பட்டார்.