/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்புஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்பு
ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்பு
ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்பு
ஒன்றியக்குழு கூட்டத்தை தி.மு.க., கூட்டணி புறக்கணிப்பு
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூரில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தை சேர்மன் தலைமையில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு ஒன்றியக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேர்மன் வசந்திபாண்டியன் தலைமையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்களும் கூட்ட அரங்கிற்கு வந்தனர். அப்போது பி.டி.ஓ., குமாரி பேசத் துவங்கியதும் தி.மு.க., கவுன்சிலர் ராஜ்மோகன் ஆட்சேபம் தெரிவித்தார். பொதுநிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதிக்காத அரசு அலுவலர்கள் மற்றும் அ.தி.மு.க., அரசை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். உடனே சேர்மன் வசந்திபாண்டியன் தலைமையில் தி.மு.க.,- பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். தே.தி.மு.க.,- இந்திய கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள் மட்டும் கூட்டத்தை விட்டு வெளியேறாமல் அமர்ந்திருந்தனர். இருந்தாலும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வளர்ச்சிப் பணிகளுக்கு பொதுநிதியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்தால் சிறப்புக்கூட்டம் நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.