Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஈகோ பிரச்னையால் மாணவர்கள் பாதிப்பு

ஈகோ பிரச்னையால் மாணவர்கள் பாதிப்பு

ஈகோ பிரச்னையால் மாணவர்கள் பாதிப்பு

ஈகோ பிரச்னையால் மாணவர்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 14, 2011 12:05 AM


Google News

விழுப்புரம் : கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களிடையே நீண்ட காலமாக தொடரும் ஈகோ பிரச்னையால் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளியில் ஓராண்டாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடையே ஈகோ தொடர்கிறது. இதனால் ஆசிரியர்கள் மீதுள்ள நம்பிக் கையை மாணவர்கள் இழந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் விசாரித்த போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசினார்களே தவிர பிரச்னை தீரவில்லை. இதனால் இடைப்பட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் அவதிப்படு கின்றனர்.



இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியவரதன், ராஜி உள்ளிட்டோர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கல்வி ஆண்டிலும் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என பெற்றோர்கள் புலம்புகின்றனர். மாணவ, மாணவிகளின் நலன் கருதி சி.இ.ஓ., விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us