ரஷ்யாவில் படகு விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி
ரஷ்யாவில் படகு விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி
ரஷ்யாவில் படகு விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி
ADDED : ஜூலை 11, 2011 06:08 PM
மாஸ்கோ:ரஷ்யாவின் வோல்கா ஆற்றில், 208 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற இரண்டடுக்கு படகு, இயந்திரக் கோளாறு காரணமாக ஆற்றில் கவிழ்ந்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ரஷ்யாவில் ஓடும் வோல்கா ஆறு, ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கென்று, இரண்டு அடுக்குகள் கொண்ட பெரிய படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆற்றை ஒட்டிய பல்கர் என்ற இடத்தில் இருந்து, கசான் என்ற இடத்திற்கு இரண்டு அடுக்கு படகில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் படகு ஓட்டிகள் என, 208 பேர் சென்றனர்.மோசமான வானிலை, படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு, அதிக கூட்டம் காரணமாக, திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில், 80 பேர் காப்பாற்றப்பட்டனர். மீதமுள்ளவர்களில், எட்டு பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த, ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வே தேவ் உத்தரவிட்டுள்ளார்.