Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதல் கட்டுப்படுத்த மேலுரம் அவசியம்

மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதல் கட்டுப்படுத்த மேலுரம் அவசியம்

மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதல் கட்டுப்படுத்த மேலுரம் அவசியம்

மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதல் கட்டுப்படுத்த மேலுரம் அவசியம்

ADDED : ஜூலை 14, 2011 01:49 AM


Google News

மோகனூர்: 'மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, மேலுரமாக யூரியா, வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்' என, மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மோகனூர் வட்டாரத்தில், 160 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. மஞ்சள் நடவு செய்த, 30, 60, 90, 120 மற்றும் 150 நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து, 25 கிலோ தரக்கூடிய, 55 கிலோ யூரியாவை, ஒரு ஏக்கருக்கு மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், 5 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா, 5 கிலோ நடவு செய்த ஒரு மாத்துக்கு பின் இடவேண்டும். நுண்ணூட்டங்களால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க, சூப்பர் பாஸ்பேட் 6 கிலோவை பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை தெளிந்த நீரை எடுத்து அதனுடன், 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து யூரியா 150 கிராம், துத்தநாக சல்பேட் 150 கிராம், இரும்பு சல்பேட் 150 கிராம் மற்றும் போராக்ஸ் 150 கிராம் சேர்க்க வேண்டும். பின் இக்கரைசலை இலையின் மேல் தெளிக்க வேண்டும். நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை காலங்களில், நுண்ணூட்ட சத்து கரைசலை, 25 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மஞ்சளில் ஊடுபயிராக மிளகாய், கத்தரி, வாழை கனகாம்பரம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுத் தாக்குதலை குறைக்க, மேலுரமாக யூரியா இடும்போது 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். நடவு செய்த ஐந்தாவது மாதத்தில் ஏக்கருக்கு, 14 கிலோ கார்போப்யூரான் குருணை மருந்தை செடியைச் சுற்றி 2-3 செ.மீ., ஆழத்தில் இட வேண்டும். பின் மணல் கொண்டு மூடி நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us