Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : ஜூலை 19, 2011 12:24 AM


Google News
ஓசூர்: ஓசூர் அசோக்லேலேண்ட் யூனிட்-2 தொழிற்சாலையில் தொழிற்ச்சங்க தேர்தலை நடத்த கோரி நேற்று தொழிலாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் அசோக்லேலேண்ட் யூனிட்-2ல் கடந்த 2007ம் ஆண்டுக்கு பின் தொழிற்ச்சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த தொழிற்சாலையில் தற்போதைய தலைவர் குசேலன் தலைமையில் ஒரு அணியினரும், மைக்கேல் பெர்ணாண்டஸ் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். தொழிற்ச்சங்க தலைவர் தேர்தலை நடத்த கோரி மைக்கேல் அணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் மைக்கேல் பெர்ணாண்டஸ் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் ஆறு நாள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால், வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார், உண்ணாவிரதம் இருந்த மைக்கேல் பெர்ணாண்டஸை கைது செய்து போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பின் சட்டசபை தேர்தல் வந்ததால், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தாமல் அமைதி காத்தனர். அசோக்லேலேண்ட் யூனிட்-2 தொழிற்சாலையில் தொழிற்ச்சங்க தலைவர் தேர்தலை நடத்த கோரி மைக்கேல் பெர்ணாண்டஸ் அணி தொழிலாளர்கள் ஜனநாயக மீட்பு குழு தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் நேற்று முதல் திடீரென மீண்டும் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொதுக்குழுவை கூட்டி தொழிற்ச்சங்க தேர்தல் நடத்த வேண்டும் எனவும், தேர்தல் நடத்தாவிட்டால் சென்னை, எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து அசோக்லேலேண் யூனிட் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தினர். அதிர்ச்சியடைந்த தொழிற்சாலை நிர்வாகம் தற்போது தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், நேற்று மாலை தொழிலாளர்கள் தற்காலியாக உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். ஏற்கனவே யூனிட்-1 தொழிற்சாலையில் குசேலன் அணி தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என தொடர் உண்ணாவிதரம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இரு யூனிட் தொழிற்ச்சாலைகளிலும் இரு தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுப்படுவதால், வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us