ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது
ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது
ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது
ADDED : ஜூலை 20, 2011 06:50 PM
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொபைல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த யோகேஸ்வரன், மற்றும் அவருக்கு சிம்கார்டு விற்பனை செய்த கல்யாணசுந்தரத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல், சிம் கார்டு விற்பனை செய்த குற்றத்தின் பேரில், கல்யாண சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.