/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நஞ்சநாடு, காயகண்டியில் தேயிலை தொழிற்சாலைநஞ்சநாடு, காயகண்டியில் தேயிலை தொழிற்சாலை
நஞ்சநாடு, காயகண்டியில் தேயிலை தொழிற்சாலை
நஞ்சநாடு, காயகண்டியில் தேயிலை தொழிற்சாலை
நஞ்சநாடு, காயகண்டியில் தேயிலை தொழிற்சாலை
ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
ஊட்டி : 'நஞ்சநாடு, காயகண்டி பகுதிகளில் தேயிலை தொழிற்சாலை அமைக்க தமிழக
அரசு நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன்
கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தூனேரி, எப்பநாடு கடநாடு கிராமங்களில்
கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை மூலமாக நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி தூனேரி
ஊராட்சி மன்றத்தில் தொரையட்டி கிராமத்தில் நேற்று நடந்தது. தமிழக
உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன், நிவாரண தொகையை வழங்கி பேசியதாவது:
வெள்ள சேதத்தினால், 90.83 ஹெக்டர் பரப்பில் உருளைக்கிழங்கு, 7.09 ஹெக்டர்
பரப்பில் முட்டைகோஸ், 73.25 ஹெக்டர் பரப்பில் காரட், 94.32 ஹெக்டர்
பரப்பளவில் இதர காய்கறி பயிர்கள் சேதமாயின. இதில் 1244 விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஒரு ஹெக்டர்
பயிர் இழப்பிற்கு ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து
ரூ.15 லட்சத்து 92 ஆயிரத்து 900 நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். இனிவரும் காலங்களில்
மழை வெள்ளத்திலிருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்கும் விதத்தில்
அனைத்து மண்வள பாதுகாப்பு யுக்திகளையும், சாகுபடி நெறிமுறைகளையும் தவறாமல்
பின்பற்ற வேண்டும். படுகர் சமுதாய தலைவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து
அளித்த பல்வேறு கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு, காயகண்டி பகுதிகளில் தேயிலை தொழிற்சாலை
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படுகர் இன மக்களை பழங்குடியினர்
பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி
உள்ளார்.
இவ்வாறு, புத்திசந்திரன் பேசினார்.நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை இணை
இயக்குநர் ஆல்துரை, உதவி இயக்குநர் ஜெகதீஷ்குமார், தூனேரி ஊராட்சி மன்ற
தலைவர் பீமன், தொரையட்டி கிராம தலைவர் மாயன் உட்பட பலர் பங்கேற்றனர்.