ADDED : ஆக 11, 2011 11:43 PM
வால்பாறை : வால்பாறை தாலுகா அளவில் நடந்த மாணவ, மாணவியருக்கான தனித்திறன் போட்டியில், தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்டு, மாணவ,மாணவியருக்கான தனித்திறன் போட்டியில், வால்பாறை தாலுகாவை சேர்ந்த 9 பள்ளிகளில் இருந்து, 337 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை, இசைக்கருவி வாசித்தல், பரதம் உட்பட போட்டிகள் நடத்தப்பட்டன. பல போட்டிகளில், வால்பாறை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவியர், முதலிடம் பிடித்தனர். வென்ற மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ரீத்தம்மாள் பாராட்டினார்.