ADDED : செப் 21, 2011 11:09 PM
சிறுபாக்கம்:மங்களூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை
மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் ஆய்வு செய்தார்.
புல்லூர்,
காஞ்சிராங்குளம், சிறுகரம்பலூர், பாசார் உட்பட பல்வேறு ஊராட்சிகளில்
இந்திரா நினைவு குடியிருப்பு கட்டுமானப் பணிகள், மகளிர் சுகாதார வளாகம்
பழுது நீக்கப்பணிகள், தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் உட்பட பல்வேறு
பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.