பூம்புகாரில் நகை கண்காட்சி துவக்கம்
பூம்புகாரில் நகை கண்காட்சி துவக்கம்
பூம்புகாரில் நகை கண்காட்சி துவக்கம்
ADDED : ஆக 05, 2011 01:59 AM
ஈரோடு: ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், நகைகள் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.
கண்காட்சியை கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். பஞ்சலோக வளையல்கள், மோதிரங்கள், செயின்கள், கொலுசுகள், கம்மல்கள், தோடுகள், நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், முத்து, பவளம் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் டைமண்ட் கற்கள் பதித்த நகைகள், நவரத்தின ராசிக்கற்கள், மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள், ஸ்படிக மாலைகள், மரகதத்தால் செய்யப்பட்ட லிங்கம், விநாயகர் சிலைகள், பாணலிங்கம், சாளக்ராமம், பஞ்சலோக எந்திரங்கள், 14 முகம் வரையிலான உத்திராட்சம் மற்றும் உத்திராட்ச மாலைகள் உள்ளன. பத்து ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையான பொருட்கள் உள்ளன. குந்தன்செட், தோடுகள், ராஜஸ்தானி, ஆன்டிக் கலெக்ஷன், டிசைன் வளையல்கள், செயின், நெக்லஸ் கற்கள், கிறிஸ்டல்கள், கொலுசுகள் ஆகியவை, இந்த ஆண்டின் புதுவரவாக வந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கிறது. பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆறுமுகம் கூறுகையில், ''சென்றாண்டு நடந்த நகை கண்காட்சியில் 1.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. நடப்பாண்டு இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.