ADDED : ஜூலை 14, 2011 11:53 PM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ராமமடத்தெருவில் உள்ள சரவணா பல் மருத்துவமனையில் உள்ள மருந்து கடையில் ரொக்கம் ரூபாய் ஐந்தாயிரம், திருவாரூர் சாலையில் உள்ள நெல் அரசி வியாபா கடையில் ரொக்கம் ரூபாய் ஐந்தாயிரம், டிவி மற்றும் டாஸ்மாக் கடையில் திருடியது தொடர்பாக கடந்தø ஜுன் 12ம் தேதி திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்குகளில் தொடர்புடைய திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி தேசிங்குராஜபுரம் வீரசேனனை (22) போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கம் மற்றும் ஒரு டிவியை பறிமுதல் செய்தனர்.