Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ADDED : ஆக 11, 2011 01:02 AM


Google News

சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து, மாணவர்கள் கல்லூரி முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் விடுதி உள்ளது. மாணவிகளுக்கு, அரை கி.மீ., தூரத்தில் தனியாக வீடு பிடித்து தங்க வைத்துள்ளனர். இங்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் மாணவிகள், சாப்பிடுவதற்காக அரை கி.மீ., தூரம் கல்லூரிக்கு நடந்து வர வேண்டும். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கென போதிய வசதிகள் இல்லை. இதை கண்டித்து, நேற்று காலை கல்லூரி முன், மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் கூறுகையில்,''கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு புதிதாக விடுதி கட்ட உள்ளோம். அதுவரை அங்கு தேவையான அடிப்படை வசதிகள் ஒரு வாரத்திற்குள் செய்து தரப்படும். மாணவிகள் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்கள் நியமிக்க உள்ளோம். பிற பிரச்னைகளுக்கு கல்லூரி தலைவரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us