ADDED : அக் 14, 2011 01:47 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் முதியவரிடம் மூன்று லட்சம் ரூபாயை நூதன
முறையில் திருடிய நபரை போலீ சார் தேடி வருகின்றனர்.
சென்னை கொட்டிவாக்கம்
ஸ்ரீராம் அவென்யூவில் வசிப்பவர் சுப்ரமணியன்,65. இவர் போலீஸ் டி.ஜி.பி.,
அலுவலக உதவியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தனது சொந்த ஊரான
திண்டிவனம் வட்டம் ஓமந்தூர் அடுத்த அண்ணம்புத்தூர் கிராமத்தில் தங்கி
இருந்தார். கடந்த 11ம் தேதி காலை திண்டிவனம் ஸ்டேட் பாங்க் கிளையில் 22
சவரன் நகைகளை அடகு வைத்து, 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றார்.
பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு, ரோட்டில் நடந்து சென்ற சுப்ரமணியன்,
முதுகு புற சட்டையில் திடீரென எரிச்சல் ஏற்பட்டது. இதனால் அருகிலிருந்த ஆதி
திராவிடர் நல தனித் தாசில்தார் அலுவலகம் முன் உள்ள வாகனங்கள்
நிறுத்துமிடத்தில் பையை வைத்து விட்டு, சட்டையை கழற்றி உதறினார். அங்கு
வந்த ஒரு நபர், அவரது சட்டையில் இருந்து ரூபாய் விழுந்து விட்டதாக
கூறினார். கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை சுப்ரமணியன் எடுத்துக்கொண்டு
திரும்பி பார்த்தபோது பணப் பையை காணவில்லை. திண்டிவனம் போலீசார் வழக்குப்
பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


