/உள்ளூர் செய்திகள்/மதுரை/நவீன மருத்துவமனை, பிரசவ விடுதி : அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகீதாநவீன மருத்துவமனை, பிரசவ விடுதி : அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகீதா
நவீன மருத்துவமனை, பிரசவ விடுதி : அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகீதா
நவீன மருத்துவமனை, பிரசவ விடுதி : அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகீதா
நவீன மருத்துவமனை, பிரசவ விடுதி : அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகீதா
ADDED : அக் 04, 2011 12:53 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 74வது வார்டு மகால் 2வது தெருவில் நவீன மருத்துவனை, பிரசவ விடுதி அமைப்பேன்.
தினமும் குறைதீர் முகாம் நடத்தி மக்கள் சேவை செய்வேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெ.என்.ஜெயகீதா உறுதி கூறினார். இவர் அ.தி.மு.க., 74வது வார்டு செயலாளர் ஜெ.டி.ஹரிராமின் மருமகள். இவர் கூறியதாவது: போலீஸ் - மக்களிடையே நல்லுறவு அமைப்பு ஏற்படுத்தப்படும். திருமலை நாயக்கர் மகால் உப்புறம், வெளிப்புறத்தில் நவீன பூங்கா, கைவினை பொருள் கண்காட்சி அமைப்பேன். வார்டில் தனி அலுவலகம் அமைத்து தினமும் குறைதீர் முகாம் நடத்தப்படும். அரசு இலவச திட்டங்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் பெற்று கொடுக்கப்
படும். விளக்குத்தூண், பேலஸ் ரோடு, கீழவெளிவீதி, புனிதமேரீஸ் பள்ளி, மஞ்சணக்காரத்தெரு பகுதிகளில் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணப்படும். சவுராஷ்ட்ரா சமூக தலைவர் எ.கே.துளசிராம் சிலை அமைக்க பாடுபடுவேன். சுகாதாரம், மின்சாரம், குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, குப்பை அகற்றுதல் போன்ற பணிகள் தடையின்றி நடக்கும். மகால் 2வது தெரு மாநகராட்சி கட்டடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, பிரசவ விடுதி அமைக்கப்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வார்டின் முக்கிய பிரமுகர், அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து குறைதீர் முகாம் நடத்தப்படும். வார்டை முதன்மையாக மாற்றுவேன். 944 257 1368 மொபைல் போனில் குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.


