/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழாகாக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா
காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா
காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா
காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா
ADDED : ஜூலை 15, 2011 12:53 AM
ராசிபுரம்: காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலயத்தில், திருப்பலி திருவிழா நடந்து வருகிறது.
ராசிபுரம் அடுத்த காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலய திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய பங்கு பணியாளர் பிலவேந்திரம் தலைமையில், அருட் பணியாளர்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். இன்று, சேலம் குழந்தை இயேசு பேராலய பங்கு தந்தை சிங்காரயன் பேசுகிறார். நாளை காலை 8 மணிக்கு, சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மரியசூசை, திருவிழா திருப்பலி நிகழ்த்துகிறார். இரவு 8 மணிக்கு, அலங்கரிக்கபட்ட தேர்பவனி நடக்கிறது. சேலம் செயிண்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான் ஜோசப் தலைமை தாங்கி பேசுகிறார். 17ம் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.