பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் : பைனலில் சுவனரேவா
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் : பைனலில் சுவனரேவா
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் : பைனலில் சுவனரேவா
ADDED : அக் 01, 2011 12:28 AM

டோக்கியோ : பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு ரஷ்யாவின் சுவனரேவா முன்னேறினார்.
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ரஷ்யாவின் சுவனரேவா, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை எதிர்கொண்டார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவனரேவா 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். பைனலில் சுவனரேவா, போலந்தின் ரத்வன்ஸ்காவை சந்திக்கிறார்.