/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஒருவருக்கு கத்தி குத்து வாலிபர் கைதுஒருவருக்கு கத்தி குத்து வாலிபர் கைது
ஒருவருக்கு கத்தி குத்து வாலிபர் கைது
ஒருவருக்கு கத்தி குத்து வாலிபர் கைது
ஒருவருக்கு கத்தி குத்து வாலிபர் கைது
ADDED : செப் 28, 2011 12:41 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் மூன்றாவது திருமணத்திற்கு பெண்தர மறுத்தவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த வெள்ளையா மகன் சங்கிலிப்பாண்டி(44). இவர் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரர் காசிப்பாண்டி. மேலும் வடக்கு திட்டங்குளம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் குருசாமிபாண்டி(25) கூலிவேலை செய்து வருகிறார். இதில் குருசாமிபாண்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துராணி என்ற பெண்ணுடன் திருமணமாகி முத்துராணி இறந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் இரண்டாவதாக முத்துமாரி(23) என்ற பெண்ணுடன் திருமணமாகி குடும்ப பிரச்னையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சங்கிலிப்பாண்டியனின் சகோதரர் காசிப்பாண்டியனின் மகள் லட்சுமியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பெண் கொடுக்க சம்மதம் தெரிவித்த நிலையில், குருசாமிபாண்டியனின் நிலை குறித்து கேட்டறிந்து விட்டு பெண்தர மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து குருசாமிபாண்டியன் லட்சுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்க சென்றதாக தெரிகிறது. அப்போது வீட்டிலிருந்த சங்கிலிப்பாண்டி பெண்தர மறுத்ததால், ஆத்திரமடைந்த குருசாமிபாண்டி அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சங்கிலிப்பாண்டியை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சங்கிலிப்பாண்டி கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அங்காளஈஸ்வரி வழக்குப்பதிவு செய்து குருசாமிபாண்டியை கைது செய்து கோவில்பட்டி ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.