பாமாயில்இறக்குமதி ஊழல் வழக்கு: முதல்வரை விசாரிக்க தடை
பாமாயில்இறக்குமதி ஊழல் வழக்கு: முதல்வரை விசாரிக்க தடை
பாமாயில்இறக்குமதி ஊழல் வழக்கு: முதல்வரை விசாரிக்க தடை
ADDED : செப் 27, 2011 05:06 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் பாமாயில் இறக்குமதி முறைகேடு குறித்து, விஜிலென்ஸ் சிறப்பு கோர்ட் விசாரித்து வரும் நிலையில், முதல்வர் சாண்டியின் பங்கு குறித்து தொடரப்பட்ட வழக்கில் , இன்று நடந்த விசாரணையில் முதல்வரை விசாரிக்க கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 1991-1992-களில் கே. கருணாகரன் முதல்வராக பதவி வகித்தபோது, நிதி அமைச்சராக, தற்போதைய முதல்வர் உம்மன் சாண்டி பதவி வகித்தார். அப்போது மலேசிய நாட்டிலிருந்து, 15 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில், மாநில அரசுக்கு ரூ. பல கோடி நஷ்டமேற்பட்டது என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, மாநில விஜிலென்ஸ் சிறப்பு கோர்ட் விசாரிக்கிறது. இவ்வழக்கில் உம்மன் சாண்டியின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க, நீதிபதி அனீபா உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சட்டசபை கொறடா பி.சி.ஜார்ஜ் ஐகோர்ட்டில் சிறப்பு கோர்ட் நீதிபதியை மாற்றக்கோரி, மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி அனீபா வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் முதல்வர் உம்மன்சாண்டியை விசாரிக்க ஐகோர்ட் தடைவிதித்து தீர்ப்பளித்தது.