சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புதிய உறுப்பினர் செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புதிய உறுப்பினர் செயலராக கே.கார்த்திகேயன் நேற்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். இவர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், சுற்றுச்சூழல், பயிற்சி மைய இயக்குனராகவும், இணைத் தலைமை சுற்றுச்சூழல் பயிற்சி மைய இயக்குனராகவும், இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராகவும் பணியாற்றியவர். இவ்வாரியத்தில், 1986ம் ஆண்டு முதல், மூத்த இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், சுற்றுச்சூழலியலில் முனைவர் பட்டமும், முதுகலைப் பட்டமும் மற்றும் வேதிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் பெற்றவர். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.