ADDED : செப் 11, 2011 12:52 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில், கடந்த ஐந்து ஆண்டாக, தி.மு.க., மேயர்
தலைமையில் பற்றாக்குறை பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் வரு
வாயை பெருக்க நடவடிக்கை எடுக்காததால், வரும் உள்ளாட்சி தேர்தலில்,
தி.மு.க., வுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.கடந்த 2006ம்
ஆண்டு, சேலம்
மாநகராட்சியை தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க.,வை சேர்ந்த
ரேகாபிரியதர்ஷினி, மேயராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2007-08ம் ஆண்டு,
மாநகராட்சியின் முதல்
பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், மொத்த வருவாய், 772 கோடியே 12 லட்சத்து
69 ஆயிரம் ரூபாய் எனவும், மொத்த செலவினம், 726 கோடியே 94 லட்சத்து 69
ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டது. நான்கு கோடியே 82 லட்சம் ரூபாய்
பற்றாக்குறையாக அறிவிக்கப்பட்டது.'அரசு நிதி உதவியை பெற்றும், வருவாய்
திட்ட
ங்கள் மூலமாகவும் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்' என்று மேயர்
ரேகாபிரியதர்ஷினி தெரிவித்தார். ஆனால், மாநகராட்சி வருவாயை பெருக்க
நடவடிக்கை எடுக்க
வில்லை. கடந்த 2008-09ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மொத்த வருவாய்,
328 கோடி ரூபாய் எனவும், மொத்த செலவு, 334 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரம்
ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆறு கோடியே 45 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்
பற்றாக்குறையாக அறிவிக்கப்பட்டது.கடந்த 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில்,
மொத்த வருவாய், 270 கோடியே 53 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனவும், மொத்த
செலவு, 277 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிலும், ஆறு கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பற்றாக்குறை
ஏற்பட்டது.கடந்த 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில், மொத்த வருவாய் 289 கோடியே 53
லட்சத்து
46 ஆயிரம் ரூபாய் எனவும், மொத்த செலவு, 294 கோடியே 93 லட்சத்து 13 ஆயிரம்
ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், ஐந்து கோடியே 45 லட்சத்து 67
ஆயிரம்
ரூபாய், பற்றாக்குறையாக அறிவிக்கப்பட்டது.நடப்பு 2011-12ம் ஆண்டு தாக்கல்
செய்த பட்ஜெட்டில், மொத்த வருவாய், 339 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரம்
ரூபாய்
எனவும், மொத்த செலவினம், 346 கோடியே 77 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் எனவும்
தெரிவிக்கப்பட்டது. ஆறு கோடியே 82 லட்சம் ரூபாய் பற்றாக்குறையாக அறிவிக்
கப்பட்டது.சேலம் மாநகராட்சியில், தி.மு.க., மேயர் தலைமையிலான ஆட்சியில்,
ஐந்து ஆண்டுகளும், பட்ஜெட்டில், பற்றாக்குறை மட்டுமே அதிகரித்துள்ளது.
தி.மு.க.,
மேயர் ரேகாபிரியதர்ஷினி, மாநகராட்சியின் வருவாயை பெருக்க போதிய நடவடிக்கை
எடுக்கவில்லை. மாநகராட்சி சார்பில், வருவாயை பெருக்க கொண்டுவரப்பட்ட
திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்த தாரர்களும் பின்வாங்கினர். எனவே, நிதி
பற்றாக்குறையால், மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மட்டுளின்றி,
பட்ஜெட்டில் அறிவிக்
கப்பட்ட திட்டங்களை கூட, நடைமுறைப்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது.மாநகராட்சி நிர்வாகத் திறமையின்மையால், பல திட்டங்கள் ஒவ்வொரு
ஆண்டும்
பட்ஜெட் புத்தகத்தில் மட்டும் இடம் பெற்று வந்தது. அதனால், வரும் உள்ளாட்சி
தேர்தலில், சேலம் மாநகராட்சியில் தி.மு.க., வுக்கு கடுமையான பின்னடைவு
ஏற்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.