/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு மூன்று பேரையும் பற்றி பேசலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு மூன்று பேரையும் பற்றி பேசலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்
அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு மூன்று பேரையும் பற்றி பேசலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்
அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு மூன்று பேரையும் பற்றி பேசலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்
அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு மூன்று பேரையும் பற்றி பேசலாம் : பொன்.ராதாகிருஷ்ணன்
ADDED : செப் 01, 2011 09:01 PM
சாயல்குடி : ''பார்லிமென்ட்டை தாக்கிய அப்சல் குருவை தூக்கிலிட்ட பிறகு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவது குறித்து பேசலாம்'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.
ராதாகிருஷ்ணன் பேசினார். சாயல்குடியில் பா.ஜ.,வின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகேசன் திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: இரு வாரங்களுக்கு முன் பா.ஜ.,மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் முத்திருளப்பன், நிலப்பிரச்னை தொடர்பாக பெருநாழி போலீஸ் ஸ்டேஷனில், ஊராட்சி தலைவர் மீது புகார் கொடுத்தார். ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் அடியாட்களுடன் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, புகார் கொடுத்தவரை தாக்கியதை, போலீசார் கண்டுகொள்ளவில்லை. கடந்த தி. மு. க., ஆட்சியில் நடந்த அராஜகம், அ.தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. பார்லிமென்ட்டை தாக்கிய அப்சல் குருவிற்கு ஆதரவாக காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா பேசியது, இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அமைச்சராக இருந்தவர், இது போன்று பேசுவது அபத்தமானது. 2000ல் முதல்வராக இருந்த கருணாநிதி, நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்ற உதவியவர், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு ஏன் செய்யவில்லை. முதல்வர் ஜெயலலிதா, முதல் நாள் சட்ட சபை கூட்டத்தில், 'இவர்களைப் பற்றி தெரியாது, தூக்கு தண்டனையை நீக்கும் அதிகாரமில்லை' என கூறியவர், பின் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் பதில் சொல்லவேண்டும். 20ஆண்டுகளாக செத்து, செத்து வாழ்ந்து கொண்டிருக்கிற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் வைத்து, திராவிட கட்சிகள் அரசியல் விளையாட்டை நடத்தி வருகின்றனர். இதைப்பற்றி காங்., ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை அப்சல் குருவை தூக்கில் போட்ட பிறகு, மற்ற விஷயத்தை பேசலாம். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.,போட்டியிடும். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியை சேர்த்துக்கொள்வோம், என்றார்.