Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பீடித் தொழிலாளர்களுக்கு இறுதி அரசாணை வெளியிட கோரிக்கை

பீடித் தொழிலாளர்களுக்கு இறுதி அரசாணை வெளியிட கோரிக்கை

பீடித் தொழிலாளர்களுக்கு இறுதி அரசாணை வெளியிட கோரிக்கை

பீடித் தொழிலாளர்களுக்கு இறுதி அரசாணை வெளியிட கோரிக்கை

ADDED : ஆக 29, 2011 11:58 PM


Google News

தென்காசி : பீடித் தொழிலாளர்களுக்கு இறுதி அரசாணை வெளியிட அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தென்காசி அரசு ஐ.டி.ஐ.யில் ரூ.57 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்க வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனை தென்காசி சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.



மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- பீடித் தொழிலாளர்களுக்கு 12.10.2010 முதல் 12/3 அரசு ஒப்பந்தப்படி அரசாணை ஆயிரம் பீடிக்கு அடிப்படை சம்பளம் கூடுதல் சம்பளம் ரூ.19.50 மற்றும் பஞ்சப்படி புள்ளி 1க்கு 3பைசா வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த திமுக அரசு 6 மாதகாலமாக அரசாணை வெளியிடாமல் காலம் கடத்திவிட்டது. இந்த அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் பீடித் தொழிற்சங்க தலைவர்கள் பலமுறை நேரில் பேசியும் இறுதி அரசாணை வெளியிடப்படவில்லை.



இதனால் 5 லட்சம் பீடித் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய சம்பள பணம் தினசரி 1.50 கோடி ரூபாயை பீடி முதலாளிகள் தர மறுக்கின்றனர். இது பீடித் தொழிலாளர்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பீடி முதலாளிகளுக்கு கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தாங்கள் உடனடியாக பீடி முதலாளிகள் தர மறுக்கும் பலகோடி ரூபாய் சம்பள பணத்தை தொழிலாளர்களுக்கு கிடைத்திட இறுதி அரசாணை வெளியிடுமாறு பீடித் தொழிலாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us