ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சிராஜ்தீன் தலைமை வகித்தார். செயலாளர் சையத் முஸ்தபா வரவேற்றார். துணை தலைவர் சிஹாபுதீன், பாரூக், மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல்சத்தார், மாவட்ட செயற்குழு அலிஅக்பர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 'ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக சேலை வழங்குவது; சமச்சீர் பாடப்புத்தகங்களை விரைவில் மாணவ, மாணவியருக்கு வழங்க வலியுறுத்துவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.