/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
ADDED : ஆக 14, 2011 03:04 AM
திருப்பூர் : ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை, மேம்படுத்தப்பட்ட
நிலையமாக மாற்ற தமிழக அரசு, 90 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கிஉள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, வெள்ளகோவில்,
காங்கயம், மூலனூர், குண்டடம், தாராபுரம், பல்லடம், குடிமங்கலம், உடுமலை,
மடத்துக்குளம், பொங்கலூர், அவிநாசி மற்றும் திருப்பூர் ஆகிய 13 இடங்களில்
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மக்கள் தொகை
அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் கொமரலிங்கம், சோமனூர் ஆகிய ஆரம்ப
சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டது.
தொரவலூர், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம்,
பொங்குபாளையம், மேற்குப்பதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சி
பகுதிகளுக்கு சேர்த்து பெருமாநல்லூரில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே
இருந்து வந்தது.
என்.எச்., ரோட்டில், பெருமாநல்லூர் நால்ரோடு அருகில் நெரிசல் நிறைந்த
இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது; அவிநாசி முதல் ஊத்துக்குளி வரை
விபத்தில் சிக்குபவர்களை இங்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையமாக
இருப்பதால் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியவில்லை. முதலுதவி மட்டுமே
செய்து திருப்பூர் அல்லது அவிநாசி, சில நேரங்களில் கோவை அரசு
மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர்.
பத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய
வசதி இல்லாததால், வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைகிறது. படுக்கைகளின்
எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையமாக மாற்றுவதுடன், கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். நோயாளிகள்
தங்கி சிகிச்சை பெற வசதியாக புதிய பிரிவு துவங்க வேண்டும் என கடந்த ஏழு
ஆண்டுகளாக, பெருமாநல்லூரில் பணிசெய்த டாக்டர்கள், ஆய்வுக்கு வரும்
உயரதிகாரிகளிடம் பரிந்துரை கடிதங்களை தந்து கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து
இருமுறை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரிலும் ஆய்வு நடத்தினர். ஆனால்
அடுத்தகட்ட நடவடிக்கை இல்லை.ஏழு ஆண்டுகளாக நீடித்த இக்கோரிக்கையை
அ.தி.மு.க., அரசு ஏற்று, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட 90
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது; இந்நிதியை கொண்டு விரைவில் புதிய
கட்டடம் கட்டப்படுகிறது.