/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டடம் திறப்பு விழாகார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டடம் திறப்பு விழா
கார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டடம் திறப்பு விழா
கார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டடம் திறப்பு விழா
கார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டடம் திறப்பு விழா
ADDED : ஜூலை 27, 2011 11:11 PM
விருத்தாசலம் : கார்மாங்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி ஊராட்சியில் புதிய கட்டங்கள் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் வீரராகவ ராவ், முத்துகுமார் எம்.எல்.ஏ., கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் செல்வராசு முன்னிலை வகித்தனர்.உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.அமைச்சர் செல்விராமஜெயம் புதிய கட்டங்களை திறந்து வைத்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராமன், செல்வராசு, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் செல்வராசு, ஊராட்சி தலைவர்கள் உஷாராணி, செல்வி, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.