நில மோசடி புகார் எதிரொலி: ஒருவர் கைது
நில மோசடி புகார் எதிரொலி: ஒருவர் கைது
நில மோசடி புகார் எதிரொலி: ஒருவர் கைது
ADDED : ஜூலை 24, 2011 09:34 PM
விழுப்புரம்:விழுப்புரம் அருகே நிலத்தை ஆக்கிரமித்து, மோசடி செய்த புகாரின்படி, 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ள குற்றப்பிரிவு போலீசார், ஒருவரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்த தொந்தி ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி பத்மினி.
அதே பகுதியில் இருந்த இவரது ஐந்தரை ஏக்கர் நிலத்தை கடந்த, 2004ம் ஆண்டு புதுச்சேரி வெள்ளாளர் வீதியைச் சேர்ந்த பெரிய நாயகசாமி மனைவி மேரிவிக்டரிடம் விற்க ஒப்பந்தம் (அக்கிரிமென்ட்) செய்துள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு வரை நில விற்பனைக்கான முழுத் தொகையை அவர் கொடுக்காததால், பத்மினி, மடுகரையைச் சேர்ந்த முத்து என்பவரிடம் நிலத்தை விற்க பவர் கொடுத்துள்ளார். அவர் மூலம் கடந்த, 2008ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அன்று ,தொந்தி ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ராஜ்குமார் மனைவி அனுராதாவிடம் நிலத்தை விற்பனை செய்தார்.இதனை எதிர்த்து, மேரி விக்டர் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால், அதே பகுதியைச் சேர்ந்த தம்பு ரெட்டியார் மூலம் விவசாயம் செய்து வந்தனர். இதனை எதிர்த்து அனுராதா தரப்பினர், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.இந்நிலையில் கோர்ட் உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிலத்தை தவிர்த்து, தங்களுக்குச் சொந்தமான நிலத்தையும் மேரி விக்டர் தரப்பினர் ஆக்கிரமித்து மோசடி செய்துள்ளதாக அனுராதா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் öŒ#தார்.அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த மேரிவிக்டர், தொந்தி ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பு ரெட்டியார், பலராமன் மகன் ரமேஷ், முத்துவரதன் மகன் குமார், பங்காரு மகன் ராஜமாணிக்கம் ஆகியோர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர். இதில், தம்பு ரெட்டியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.