ADDED : ஜூலை 11, 2011 09:22 PM
உடுமலை : உடுமலை சாளையூர் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி, மாகாளியம்மன்
கோவில்களில், கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது.
நேற்று காலை
5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை; 7.00 மணி முதல் சித்தி விநாயகர்,
பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம், காலை 8.00 மணிக்கு மாகாளியம்மன்
கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது.