/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைமாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 14, 2011 01:30 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. டி.எஸ்.பி., இசக்கி ஆனந்தன் தலைமையிலான போலீசார், ஒரு வாரமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை குறித்து ரகசியம் காக்கப்படுவதால், குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் குறித்த விபரம் இது வரை தெரியவில்லை.
'ரோடு மோசடி குறித்த விசாரணை நடப்பதாக,' மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


