ADDED : ஆக 24, 2011 12:04 AM

புழல் : நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., கவுன்சிலரை, எம்.எல்.ஏ., ஸ்டாலின், நேற்று சந்தித்தார்.
சென்னை பெருங்குடி, திருமலை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 46.
பெருங்குடி பேரூராட்சியின் 9வது வார்டு (தி.மு.க.,) கவுன்சிலர். நில மோசடி வழக்கு தொடர்பாக, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 6ம் தேதி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை, நேற்று காலை, எம்.எல்.ஏ., ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். பின், நிருபர்களிடம் கூறுகையில், 'ரவிச்சந்திரன் மீது இதற்கு முன் எந்தவிதமான வழக்கும் இல்லை. இப்போதைய அரசு, வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளது. இந்த வழக்கையும் சட்ட ரீதியாக சந்திப்போம்' என்றார்.