/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் 6 பேர் கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்சேலம் 6 பேர் கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
சேலம் 6 பேர் கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
சேலம் 6 பேர் கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
சேலம் 6 பேர் கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
ADDED : ஜூலை 15, 2011 01:01 AM
சேலம்: சேலம் தாசநாயக்கன்பட்டியில், ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியான, சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜராஜன் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம், தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உட்பட ஆறு பேர், 2010 ஆகஸ்ட் 12ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியாக, சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜராஜன் நியமிக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவகுரு, ரஜினி, தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட ஒன்பது கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை ஜூலை18ல் தாக்கல் செய்யப்பட இருந்தது. இந்நிலையில் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி., ராஜராஜன், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில் கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு இருப்பதால், திட்டமிட்டபடி ஜூலை18ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


