Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கிருபானந்த வாரியாரின் 106வது பிறந்த நாள் விழா

கிருபானந்த வாரியாரின் 106வது பிறந்த நாள் விழா

கிருபானந்த வாரியாரின் 106வது பிறந்த நாள் விழா

கிருபானந்த வாரியாரின் 106வது பிறந்த நாள் விழா

ADDED : செப் 06, 2011 01:26 AM


Google News
சேலம்: கிருபானந்த வாரியாரின், 106வது பிறந்த நாள் விழா சேலம், ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் கொண்டாடப்பட்டது.

மணவாளன் தலைமை வகித்தார். திருமலை, முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வஜ்ரவேலு வரவேற்றார். 'அறிவு பலமா? ஆன்மீக வளமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. அரசு பரமேஸ்வரன் நடுவராக இருந்தார். ஆன்மீகம் என்ற தலைப்பில், தமிழருவி மணியன் இலக்கிய உரையாற்றினார். வாரியார் விருது கந்தசாமிக்கும், பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேருக்கு உதவித்தொகையும், 25 ஏழை மாணவர்களுக்கு, இலவச ஆடையும் வாரியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. புரட்சி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us