விநாயகர் சிலைகள் உடைப்பு: போலீசார் குவிப்பு
விநாயகர் சிலைகள் உடைப்பு: போலீசார் குவிப்பு
விநாயகர் சிலைகள் உடைப்பு: போலீசார் குவிப்பு
ADDED : ஆக 20, 2011 07:11 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால், பதட்டம் நீடிக்கிறது.
இங்குள்ள குமரன் மார்க்கெட் தெரு கலை விநாயகர் கோயிலில், ஒன்றரை அடி உயர சுவாமி சிலை உள்ளது. இதை விஷமிகள் சிலர் சிதைத்தனர். இதேபோல், ஆக்னஸ்மேரி தெருவில் உள்ள விநாயகர் கோயில் கோபுரத்தில் இருந்த சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன. இதை அறிந்து பக்தர்கள் கூடியதால் பதட்டம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., நடராஜமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் கூறுகையில், 'குமரன் மார்க்கெட் தெருவில், குடிபோதையில் சிலர் உடைத்ததாக தெரிகிறது. இதற்கு புதிய சிலை, போலீசார் சார்பில் வைக்கப்படும். ஆக்னஸ் மேரி தெருவில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் போது, பந்து அடித்து சிலை உடைந்துள்ளது. இதனால் யாரும் ஆத்திரப்பட தேவையில்லை,' என்றனர்.