Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டாடா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டாடா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டாடா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டாடா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

ADDED : ஜூலை 12, 2011 09:59 PM


Google News
புதுடில்லி: நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல் வெளியானதை எதிர்த்து தொழிலதிபர் டாடா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீரா ராடியாவுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தொலைபேசி உரையாடல் வெளியானது. இதனை எதிர்த்து ரத்தன் டாடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தொலைபேசியில் பேசியது பல தனிப்பட்ட விவகாரம், சாதாரணமானவை. அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உரையாடலை வெளியிடுவதை மீடியாக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். உரையாடலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரையாடலை வெளியிட்டது எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது என கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி எஸ் சிங்வி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் வழக்கின் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us