/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்
காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்
காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்
காப்பீட்டு திட்டம்: தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்
ADDED : செப் 18, 2011 10:38 PM
திண்டுக்கல் : தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தை குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம், பல தனியார் மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டு சிகிச்சை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தின. அ.தி.மு.க., அரசு பழைய காப்பீடு திட்டத்தை நிறுத்திவைத்து, முதல்வர் காப்பீட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய திட்டத்தை இதுவரை அமல்படுத்ததால், தனியார் மருத்துவமனைகளில் ஏழை கூலி தொழிலாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், அரசு மருத்துவமனைகளை, தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு சில ஆஸ்பத்திரிகளை மட்டுமே கண்டறிந்து முதல்வர் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.