மாணவரை கடத்த முயன்ற முகமூடி ஆசாமிகள்: சீர்காழி அருகே பரபரப்பு
மாணவரை கடத்த முயன்ற முகமூடி ஆசாமிகள்: சீர்காழி அருகே பரபரப்பு
மாணவரை கடத்த முயன்ற முகமூடி ஆசாமிகள்: சீர்காழி அருகே பரபரப்பு
ADDED : செப் 11, 2011 12:59 AM
மயிலாடுதுறை : சீர்காழியில், பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்ற மாணவனை, முகமூடி ஆசாமிகள் கடத்த முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.
இவர், சீர்காழி பஸ் நிலையம் எதிரில், மருந்துக் கடை வைத்துள்ளார். சத்திய சாய் சேவா சமிதி மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர், மகன் Œõ#கிருஷ்ணன்,14, சீர்காழி கடை வீதியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற சாய்கிருஷ்ணனை, சட்டநாதர் காலனி அருகே, காரில் வந்த முகமூடி அணிந்த ஆசாமிகள் மூன்று பேர் கடத்த முயன்றனர்.திடுக்கிட்ட அவர், கூச்சலிடவே பொதுமக்கள் ஓடி வந்தனர். உடன், மர்ம ஆசாமிகள், மாணவனை விட்டு விட்டு, காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்த புகாரின்படி, சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காரின் பதிவெண் போலி என தெரியவந்தது. தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.