ADDED : ஆக 19, 2011 03:04 AM
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பில் ஓய்வு பெற்ற ஊர்க்காவல் படை அணித்
தலைவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு ஊரக
ஊர்க்காவல் படையில் அணித் தலைவராக பணியாற்றியவர் ராஜேந்திரன்.
இவர் ஓய்வு
பெற்றதையொட்டி பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.படை தளபதி தில்லைசேகரன்
தலைமை தாங்கினார். கனகசபை, குணசேகரன், குருநாதன் முன்னிலை வகித்தனர். அணித்
தலைவர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். கோட்ட தளபதி ரவீந்திரன், நகர அனைத்து
வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாராஜன், ஜேசீஸ் முன்னாள் தலைவர் முருகேசன்
ஆகியோர் பாராட்டிப் பேசினர்.ஓய்வு பெற்ற ராஜேந்திரனுக்கு நினைவுப் பரிசாக
மோதிரம் அணிவிக்கப்பட்டது.


