/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாழப்பாடி அருகே நடந்த சோகம் பூஜாரியை வேலால் குத்திய பக்தர்வாழப்பாடி அருகே நடந்த சோகம் பூஜாரியை வேலால் குத்திய பக்தர்
வாழப்பாடி அருகே நடந்த சோகம் பூஜாரியை வேலால் குத்திய பக்தர்
வாழப்பாடி அருகே நடந்த சோகம் பூஜாரியை வேலால் குத்திய பக்தர்
வாழப்பாடி அருகே நடந்த சோகம் பூஜாரியை வேலால் குத்திய பக்தர்
ADDED : ஆக 15, 2011 02:30 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே காளியம்மன் கோவில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாட்டில் சாமியாடிய பக்தர், கோவில் பூஜாரியை வேலால் குத்திய சம்பவம் குறித்து, வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில், போயர் சமூக மக்கள் குலதெய்வமாக வணங்கிவரும் காளியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிவெள்ளி தினத்தில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்து வருகிறது. கடந்த வெள்ளியன்று நடந்த ஆடிவெள்ளி சிறப்பு பூஜை வழிபாட்டில், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன்(50) என்பவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென சாமியாடிய அவர், 'மலைக்கரட்டில் இருந்து கொண்டு வந்த கற்களை கொண்டு வந்து நட்டு வைத்து வழிபட்டு வருவது தெய்வக்குற்றம்' என தெரிவித்ததோடு, கோவில் வளாகத்தில் இருந்த வேலை பிடுங்கி வீசியுள்ளார். அந்த இரும்பு வேல், கோவில் பூஜாரியான பரமசிவம் மகன் வெங்கடேஷ்(22) என்பவரின் இடுப்பில் குத்தி ரத்தக்காயம் ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர், சாமியாடியதோடு, பூஜாரியை வேலால் குத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த வாழப்பாடி போலீஸார், பூஜாரியை வேலால் குத்திய பக்தரை, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர், அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சாமியாடியுள்ளார். அதனால், அவரை போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கிடையே, சாமியாடியபடி பூஜாரியை குத்திய பக்தர் வேல்முருகன்(50) மற்றும் அதில் காயமடைந்த பூஜாரி வெங்கடேஷ்(22)ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.