உள்ளாட்சி தேர்தல்: வரும் 18ல் கூட்டம்
உள்ளாட்சி தேர்தல்: வரும் 18ல் கூட்டம்
உள்ளாட்சி தேர்தல்: வரும் 18ல் கூட்டம்
ADDED : ஜூலை 14, 2011 12:49 AM

உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை ஆலோசிக்க, வரும் 18ம் தேதி ஆலோசனைக் கூட்டம், சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில், உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலில், தொகுதிகள் சீரமைக்கப்பட்டது போல, உள்ளாட்சியில், நிறைய பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதற்காக, கூடுதல் ஓட்டுச் சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன.
இதற்கான ஆலோசனைக் கூட்டம், ஜூலை 18ல், சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சமர்ப்பிக்கும் விதமாக, தற்போதைய நிலவரங்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள், சேகரித்து வருகின்றனர்.
கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளது; தேர்தல் நடத்தும் முறை குறித்து, இதில் ஆலோசிக்க உள்ளனர்'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -