/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரூ.2 கோடி நிலத்தை அபகரித்ததோடு கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைதுரூ.2 கோடி நிலத்தை அபகரித்ததோடு கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
ரூ.2 கோடி நிலத்தை அபகரித்ததோடு கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
ரூ.2 கோடி நிலத்தை அபகரித்ததோடு கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
ரூ.2 கோடி நிலத்தை அபகரித்ததோடு கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
ADDED : ஜூலை 11, 2011 11:35 PM
திருவள்ளூர் : பொன்னேரி அருகே, 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்ததோடு, கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி புதிய தேரடி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஸ்ரீராம், 35. இவருக்கு சொந்தமாக கும்மங்களம் கிராமத்தில் 9.50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சேது மகன் கருணாமூர்த்தி, 61, சென்னை அயனாவரம் ஐ.சி.எப்., குடியிருப்பில் வசிக்கும் தியாகராஜன், துளசிராம், பம்மல் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் மகன் பாலமுரளி, 29 ஆகியோர் அபகரித்து நிலத்தில் குடிசை போட்டுள்ளனர்.
இதையறிந்த ஸ்ரீராம், ''எனக்கு சொந்தமான நிலத்தில் ஏன் குடிசை போட்டீர்கள்,'' என அவர்களை கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி, கையில் கத்தியை வைத்துக் கொண்டு நிலத்திற்குள் நுழைந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இது குறித்து ஸ்ரீராம் கொடுத்த புகாரின்பேரில், பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து கருணாமூர்த்தி, பாலமுரளி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.