Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி பணப்பட்டுவாடா தடுக்க வாகன சோதனை குழு

உள்ளாட்சி பணப்பட்டுவாடா தடுக்க வாகன சோதனை குழு

உள்ளாட்சி பணப்பட்டுவாடா தடுக்க வாகன சோதனை குழு

உள்ளாட்சி பணப்பட்டுவாடா தடுக்க வாகன சோதனை குழு

ADDED : அக் 03, 2011 11:01 PM


Google News

தேனி : சட்டசபை தேர்தல் பாணியில் உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க, மாநிலம் முழுவதும் வாகன சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்க வேட்பாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை தடுக்கும் வகையில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு எஸ்.ஐ., மூன்று போலீசார் அடங்கிய வாகன சோதனை தடுப்புக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பாணியில் வாகன சோதனை நடத்துவது, செக்போஸ்ட்களில் சோதனை நடத்துவது, தகவல் அடிப்படையில் வீடுகள், கடைகள், குடோன்களில் ரெய்டு நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us